கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் ஆர்வம்
ADDED :1311 days ago
அவிநாசி: அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் உள்ள ஸ்ரீபட்டத்தரசியம்மன் மற்றும் ஸ்ரீ கன்னிமர், ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை, 3:00 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்ணியான வாசனம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட பூஜைகளும், தொடர்ந்து, ஸ்ரீ பட்டத்தரசியம்மன் விமானம், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பட்டத்தரசியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, மஹா அபிஷேகம், தொடர்ந்து, அலங்கார பூஜை, மஹா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.