பொன்பத்தி சக்திவேல் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
செஞ்சி: பொன்பத்தி சக்திவேல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தில் அமைந்திருக்கும் விநாயகர், சக்திவேல் முருகன், நவக்கிரகங்கள், மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பெருமாள், துர்க்கை, இடும்பன் மற்றும் கொடிமரத்திற்கு திருப்பணிகள் செய்து ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 10 தேதி கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பிரவேசபலி ஆகியன நடந்தது. 11ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம் ஆகியனவும், மாலை 4.30 மணிக்கு ரக்ஷா பந்தனம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் ஆகியன நடந்தது. நேற்று 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், நாடி சந்தானமும், 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தொடர்ந்து யாத்ரா தானம், கலசம் புறப்படும் 8 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 8.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பொன்பத்தி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.