உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பேரூரில் போக்குவரத்து மாற்றம்

பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பேரூரில் போக்குவரத்து மாற்றம்

 பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம், நாளை மாலை நடக்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜை, திருவிழா நடந்து வருகிறது. இன்று, இரவு, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை சேவை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், நாளை மாலை, 4:31 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி, பேரூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு கூறுகையில்,"சிறுவாணி ரோட்டில், நாளை, மாலை, 3:00 மணிக்கு முதல் இரவு, 8:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் வாகனங்கள், செல்வபுரம், புட்டுவிக்கி, சுண்டக்காமுத்தூர் வழியாக செல்ல வேண்டும். சிறுவாணியில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர் வழியாக செல்லலாம்,"என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !