கோயில்களில் விரிவாக்க பணி
சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை தமிழ் துறை சார்பில் திருக்கோயில் பழம்பொருள் பாதுகாப்பு குறித்த களப்பணி நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதுகலை தமிழ் துறை தலைவர் சிவநேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் மாணவர்களை நெறிப்படுத்தினார். ஈஞ்சார் கிராமத்திலுள்ள சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆலடி ஈஸ்வரன் திருக்கோயில், பெருமாள் கோயில் ஆகியவற்றிற்கு சென்று கோயிலின் அமைப்பு, கட்டடக்கலை , சிற்ப ஓவியங்கள் கல்வெட்டுகள் , அதன் தனித்தன்மைகள் பற்றி அறிந்தனர். பொதுமக்களிடமிருந்து பழமையான புழங்கு பொருட்கள், அரிய வகை கலைப்பொருட்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், பழமொழிகள் ஓலைச்சுவடிகள் போன்றவற்றை சேகரித்தனர் . முதுலை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இளவரசு, பொன்னுராஜன் கலந்து கொண்டனர்.