உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலையெடுப்பு விழா

சிலையெடுப்பு விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி கோவிலில் புதிதாக 108 அடி உயர ராஜகோபுரம் கோபுரம் எழுப்பி, கோயில் வளாகத்தை கருங்கற்களால் புரணமைப்பு செய்யும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. பணிகள் நிறைவு பெற்று வரும் வைகாசி 27 ல் கும்பாபிசேக வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கும்பாபிசேக விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில் உள்ள சிற்ப கலை கூடத்தில் உருவாக்கப்பட்ட பாலவிநாயகர், அங்காள ஈஸ்வரி, எம்பெருமான், பெத்தனசாமி, காமாட்சி அம்மன்,சோணைகருப்புசாமி, வடக்குவாச்சி அம்மன், ராக்காச்சியம்மன் உள்ளிட்ட 8 தெய்வங்களின் சிலைகளை கோவிலின் பூசாரிகள் கோடாங்கிகளுடன் ஆரவாரத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். கோயில் வாளாகத்தில் தண்ணீர் தொட்டியில் வைத்தனர். கும்பாபிசேகத்திற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !