சதுரகிரியில் பங்குனி வழிபாடு: நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத பிரதோஷம், பவுர்ணமி, பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 15) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட உள்ளதாக அறநிலை துறை தெரிவித்துள்ளது. மார்ச் 15-ல் பிரதோஷம், 17ல் பவுர்ணமி, 18ல் பங்குனி உத்திரத் திருவிழா நடப்பதை முன்னிட்டு 18ஆம் தேதி முதல் தினமும் காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட உள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும், வனவிலங்குகள் நலன் கருதி ப்ளாஸ்டிக் பைகள், மினரல் வாட்டர் பாட்டில்கள் கொண்டு செல்வதை தவிர்க்கவும், இரவில் கோயிலில் தங்குவதை தவிர்த்து உடனடியாக திரும்பவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென அறநிலையத்துறை, வனத்துறை தெரிவித்துள்ளது.