உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா

குபேர சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தொப்பம்பட்டி ஜங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகரில் குபேர சீரடி சாய்பாபா கோவில் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன ஹோமம், சந்தன கணபதி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தன. விழாவையொட்டி, குபேர சீரடி சாய்பாபாவுக்கு, 50 வகையான மூலிகை அபிஷேகங்கள் நடந்தன. நிகழ்ச்சியில், நரசிம்மநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி, பன்னிமடை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. விழாவில், நாயக்கன்பாளையம் சீரடி சாய்பாபா சன்ஸ்தான் குழுவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !