உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகம்

பெரியகுளம் கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகம்

பெரியகுளம்: கோதண்டராமர் கோயிலில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெரியகுளம் வடகரை கோதண்டராமர் திருக்கோயில் 200 ஆண்டு பழமையானது. ராமர், சீதை,லட்சுமணர், ஆஞ்சநேயர் மூலவர்களாகவும், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஜக்கம்மாள், சேஷம்மாள் ஆகியோர் கோயில் சுற்றுப்புறங்களில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் ஒரே ராமர் கோயில்.நேற்று மங்களம் இசையுடன் ஹோமம் பூஜைகள் நடந்தது. காலை 6 மணி முதல் 7: 29 வரை கும்பாபிஷேகமும், சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை அர்ச்சகர் திருவேங்கடசாமி நடத்தினர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கோவிந்தராஜ், சதீஷ் கண்ணன் கோகுலக்கண்ணன் மற்றும் பக்தர்கள் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !