உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவம்

முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவம்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி, வண்டி மாகாளி உற்சவ விழா சக்தி கோஷத்துடன் ஆரவாரமாக நடந்தது.

இக்கோயிலில் பங்குனி விழா மார்ச் 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று காலை 11:00 மணிக்கு அம்மன் எட்டு கரங்களுடன் காளி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து சிறுவர்-சிறுமியர் முருகன், விநாயகர், அம்மன், குறவன், குறத்தி உள்ளிட்ட வேடங்களில் வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் சக்தி கோஷம் முழங்க ஆரவாரத்துடன் சுவாமி சின்னக்கடை வீதி மண்டகப்படி அடைந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு இரட்டை காளை மாடுகள் பூட்டிய வண்டியில் பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி வந்தனர். மேலும் வண்டியின் மேல் பகுதியில் மாகாளி வேடமிட்டவருடன் அம்மன் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. பின்னர் சின்னக்கடை வீதியில் இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை வன்னியகுல சத்திரிய மகா சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !