ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதான திட்டம் துவக்க முடிவு
ADDED :4932 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், அன்னதான திட்டத்தை துவக்க, இந்து சமய அறநிலையத்துறை, முடிவு எடுத்து உள்ளது. இத்துறை செயலர் ராஜாராம், இதுகுறித்து நேற்று கோவில் அலுவலர்களுடன் ஆலோசித்தார். இங்குள்ள பூதத்தாழ்வார் மண்டபத்தை புதுப்பித்தல், கோவிலுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைப்பது, கோவிலில் அன்னதான திட்ட துவக்க, அன்னதான கூடம் அமைப்பது ஆகியவை குறித்து செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோருடன் ஆலோசித்தார். இத்திட்டங்களுக்கான மதிப்பீடு தயாரித்து, தலைமையகத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.