உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாகப்பாடி அம்மனுக்கு முப்பூசை வழிபாடு

தாகப்பாடி அம்மனுக்கு முப்பூசை வழிபாடு

கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் பகுதியைச்சேர்ந்த டெம்போ மற்றும் மினி டெம்போ உரிமையாளர்கள் ஆடி முதல் தேதியான நேற்று தாகப்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து முப்பூசை வழிபாடு செய்தனர். காலை 9 மணி அளவில் அனைத்து வண்டிகளும் ஊர்வலமாக நகரைச்சுற்றி வந்தனர். பிறகு கோமுகி அணைப்பகுதி கரைக்கு கீழ்பகுதியில் உள்ள தாகப்பாடி அம்மன் கோவிலுக்கு சென்று முப்பூசை வழிபாடு நடத்தினர். மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !