ஸ்ரீரங்கம் பிரம்மோத்ஸவ விழா: தங்கபல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடு
ADDED :1304 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆதி பிரம்மோத்ஸவம் திருநாளின் ஆறாவது நாளான நேற்று (15ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை 3.30 மணி அளவில் கண்ணாடி அறையிலிருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் மஹாஜன உபயமண்டபம் சேர்ந்தார். பின் மேற்படி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணியளவில் சேர்த்தி மண்டபம் சேர்ந்து ஸ்ரீகமலவல்லி நாச்சியாரோடு தற்சமயம் சேர்த்தி சேவை நடைபெற்று கொண்டுள்ளது. இன்று (16ம் தேதி) அதிகாலை 1.30 மணி அளவில் சேர்த்தி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் , ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டு கண்ணாடி அறை சேர்ந்தார்.