உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமவார பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு

சோமவார பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு

ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில், ஆடி மாத சோமவார பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் கோட்டை பகுதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடி மாதம் முதல் தேதியில், சோமவார பிரதோஷம் வந்ததால், காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டீஸ்வரி, நந்தி ஸ்வாமிகளுக்கு, அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. இதில், காயநிர்மலேஸ்வரர், வெள்ளி கவசம், புஷ்பம் என, சர்வ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வெங்கனூர் விருத்தாச்சலீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !