ஆடி மாதம் பிறப்பு முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :4871 days ago
சேலம்: ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம், மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படும். சேலம், குமாரசாமிப்பட்டி கோவிலில், அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு வெள்ளை முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு, வீடுகளுக்கு அருகே ஒன்று திரண்ட மக்கள் தேங்காயை சுட்டு, கோவிலுக்கு எடுத்து சென்று படையல் செய்து வழிபட்டனர்.