நயினார்கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ADDED :1303 days ago
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலின் துணைக் கோயிலாக உள்ள, இங்கு நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனைக்குப் பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மார்ச் 18 இரவு 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் அர்ச்சுனன், திரவுபதிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மேலும் மார்ச் 22 இரவு பூக்குழி விழா நடக்க உள்ளது. மறுநாள் 9 ம் விழாவாக மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், நயினார்கோவில் சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் செய்து வருகின்றனர்.