உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பாலசுப்பிரமணியர் நாளை பங்குனி தேர்த்திருவிழா

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் நாளை பங்குனி தேர்த்திருவிழா

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நாளை மாலை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

பழமையான இக்கோயில் வராக நதியில் இரு கரைகளிலும் ஆண்,பெண் மருத மரங்கள் நடுவே குளிப்பது விசேஷம். இதனால் தொழில்,கல்வி,செல்வம், குழந்தைப்பேறு உட்பட குடும்பம் மேன்மை உண்டாகும் என்பது ஐதீகம். உத்திரபிரதேசம் மாநிலம் காசிக்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் இத்தகைய அம்சம் உள்ளது. வராக நதிக்கரையில் ஐஸ்வர்ய விநாயகரை தரிசித்து பாலசுப்ரமணியர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்வது வழக்கம்.பாலசுப்பிரமணியர்,ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனித்தனி சன்னதிகளுக்கும் தலா ஒரு கொடி மரம் உள்ளது. கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 9 இல் கொடியேற்றத்துடன் துவங்கியது பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நாளை (மார்ச் 17 ) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை, மண்டகப்படிதாரர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !