உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாகாளியம்மன் கோயில் மாசி திருவிழா

வீரமாகாளியம்மன் கோயில் மாசி திருவிழா

சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா மார்ச் 8, பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.மார்ச் 13ல் கிராம சுவாமிகளுக்கு மாலை அணிவித்தல், பக்தர்கள் பொங்கல் வைத்து, பூத்தட்டு அம்மன் வீதிஉலா நடந்தது. 14ல் திருவிளக்கு பூஜையை தொடர்ந்து நேற்று பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மார்ச் 16) முளைப்பாரி ஊர்வலம், நாளை(மார்ச் 17) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !