சேஷ வாகன உற்சவம்: பக்தர்கள் தரிசனம்
தங்கவயல் : தங்கவயல் பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் 87 ம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆர்ய வைஸ்ய மண்டலி சார்பில் சேஷ வாகன உற்சவம் நேற்று நடந்தது. விழாவை ஒட்டி நேற்று காலையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
மங்கள வாத்தியம் முழங்க காலை 9:00 மணிக்கு, ஆர்ய வைஸ்ய மண்டலி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் உற்சவ மூர்த்தியை நகர்வலம் எடுத்து சென்றனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பிரசாத வினியோகம், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சேஷ வாகன உற்சவத்தில் சுவாமி நகர் வலம் கொண்டு வரப்பட்டது.
ஆர்ய வைஸ்ய மண்டலி தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:எம்பெருமானை வழிபடுவோரை என்றைக்குமே அவர் கைவிட்டதில்லை. திருவிழா காலங்களில் மட்டுமின்றி எல்லா நாட்களிலுமே கோவிலில் சுவாமியை வழிபட வேண்டும். மனதுக்கு நிறைவு கிடைக்கும். வேண்டிய் பலன் கிடைக்கும்.கோவிலின் வழிபாட்டால், நகரம் செழிப்படைய இறைவன் அருள் தருவார். தங்கவயல் நகரில் அரசு சிறப்பு பொருளாதார மண்டலமாக அரசு அறிவித்துள்ளது.இனி எல்லாமே நல்லதாக நடக்கும். கோவில் அபிவிருத்தி பணிகள் நிறைவேற அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.