சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
ADDED :1301 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நேற்று வேலை நாளாக இருந்ததால் ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களே கோவிலுக்கு வந்திருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், ஆங்காங்கே மர நிழலில் தங்கி ஓய்வெடுத்து பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து திரும்பினர். கோவிலில் மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாடு நடந்தது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூஜாரிகள் பிரதோஷ வழிபாடு பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.