உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்

ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரில் ராஜகணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை அமைத்தல், முதல் கால பூஜை நடந்தன. தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை ஆகியன நடந்தன. அஷ்டபந்தன பூஜை, அஷ்டபந்தன அபிஷேகம் ஆகியவற்றை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிரசாதம் விநியோகித்தல், அன்னதானம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !