கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் பாலாலயம் பூஜை
ADDED :1298 days ago
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கத்தின் அடையாளமாக பாலாலய பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் வாசுதேவ புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி முதற்கால ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடி பூஜை ஆராதனை நடந்தது. பின்னர் கதலி நரசிங்கப்பெருமாள், கமலவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், கருடன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் பைரவர் சந்நிதிகள் மற்றும் கோபுர கலசங்களில் பாலாலய பூஜைகள் நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் தனபால் முன்னிலையில் பூஜைகள் நடந்தன. இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமதிலகம் ஏற்பாடு செய்திருந்தார். பாலாலய பூஜைகள் தாடிக்கொம்பு ஜெகன்நாத பட்டர் தலைமையில் குழுவினர் செய்தனர்.