உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான ஒவியங்கள் நிறைந்துள்ள மைலாப்பூர் சித்திர சத்திரம்

பழமையான ஒவியங்கள் நிறைந்துள்ள மைலாப்பூர் சித்திர சத்திரம்

 மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு தெற்கு மாடவீதியில் அமைந்துள்ள ‛சித்திர சத்திரத்தில்’ இடம் பெற்றுள்ள பழமையான சிற்பங்களும் ஒவியங்களும் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளது. மைலாப்பூர் பங்குனி திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சென்னை வியாசர்பாடியில் பதினெட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்த வள்ளல் விநாயக முதலியார் என்பவரால் ஏற்படுத்தப்பட்டதுதான் வள்ளல் வியாசர்பாடி விநாயக முதலியார் சத்திரம்.இந்த சத்திரத்தில் ஏாராளமான பழமையான ஒவியங்களும் இடம் பெற்றதால் நாளடையவில் இது சித்திர சத்திரம் என்றே அழைக்கப்படுகிறது.

1852ல் அமைக்கப்பட்ட இந்த சித்திர சத்திரம் பங்குனி திருவிழாவின் போது மட்டுமே திறந்து இருக்கும்.கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா வருகின்ற 18 ந்தேதியுடன் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது. இச்சித்திர சத்திரத்தில் கற்பகாம்பாள் மயிலாக மாறி ஈசனை வணங்கியது, திருஞான சம்பந்தர் கோயிலில் பதிகம் பாடி பூம்பாவை எனும் பெண்ணை சாம்பலில் இருந்து உயிர்ப்பித்தது, கண்ணன் சிறு வயதில் கோகுலத்தில் செய்த குறும்புகள்,அரிச்சந்திர புராணம்,அரக்கர்கள் ஓவியங்களும் காணப்படுகின்றன.அத்துடன் புண்ணியம் செய்தால் போகக்கூடிய சொர்க்கம் பாவம் செய்தால் செல்லக்கூடிய நரகம் போன்றவைகள் பற்றிய ஒவியங்களும் இடம் பெற்றுள்ளன.மேலும் பல்வேறு பழமையான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பொம்மைகள் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. காபலீஸ்வரர் கோயில் திருவிழாவிற்கு செல்பவர்கள் இந்த சித்திர சத்திரத்தையும் பார்க்கலாம்.அனுமதி இலவசம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !