உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் சிலை கண் விழித்ததாக பக்தர்கள் பரவசம்

பெருமாள் சிலை கண் விழித்ததாக பக்தர்கள் பரவசம்

திருப்பூர் : திருமுருகன்பூண்டியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஸ்ரீவரதராஜபெருமாள் சிலை, கண் விழித்ததாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உடுமலை தாலுகா, பூலாங்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட அந்தியூர் கிராமத்தில், ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. திருமுருகன்பூண்டியில் உள்ள சாமுண்டீஸ்வரி சிற்ப கலைக்கூடத்தில், சுவாமி சிலைகள் வடிவமைக்கப்பட்டன.நேற்று முன்தினம் அந்தியூர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. பெருமாள் சிலையை, தண்ணீர் தொட்டிக்குள் இறக்கிய போது, கண் திறந்து பார்த்து, புன்னகை புரிந்தது போல் இருந்ததாக, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பணிக்குழுவினர் கூறுகையில், சிலைகளை எடுத்து வந்து, ஜலவாசத்தில் வைக்க ஏற்பாடு செய்தோம். அப்போது, பெருமாள் சிலை, கண் திறந்து பார்த்து, சிரிப்பது போல் இருந்தது. பெருமாளின் முழு அனுக்கிரஹம் கிடைக்கப்பெற்றதால், மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !