போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன், வள்ளி திருமணம்
ADDED :1359 days ago
போடி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, போடி சுப்பிரமணியர் கோயிலில் நேற்று முருகன், வள்ளி திருமணம் நடந்தது.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அதன் பின் முருகன்,வள்ளிக்கு திருமணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் ஆண்டிபட்டியை சேர்ந்த முத்தையா என்பவர் ஒரு தேங்காய் ரூபாய் 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.