வடபழனி ஆண்டவர் கோயில் உற்சவர் மண்டபம் திறப்பு
ADDED :1299 days ago
சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் உற்சவர் மண்டபம் இன்று
திறக்கப்பட்டது. மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடபழனி ஆண்டவர் கோயில் உற்சவர்
மண்டபம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது கல்லால்
தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள உற்சவர் மண்டபத்தில் வடபழநி ஆண்டவர் சர்வ
அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று பங்குனி
உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஏராளமான
பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.