காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு, இன்று சனிக்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
காளஹஸ்தி கோயிலில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்வது பாரம்பரியமாக இருந்து வருகிறது . இந்த நிலையில் வார இறுதி நாட்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. கடந்த நான்கு , ஐந்து நாட்களாக புயல் காரணமாக குறைந்த பக்தர்கள் கூட்டம், தற்போது அலைமோதுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் சனீஸ்வர அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை முதல் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. தென்னகத்தின் கைலாயம் என்று புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், ராகு காலத்தில் பக்தர்கள் இங்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இன்று சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணைய் அபிஷேகம் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டது குறிபிடத்தக்கது.