உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் : பக்தர்கள் பரவசம்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் : பக்தர்கள் பரவசம்

கம்பம்: கம்பம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்தரத்தை முன்னிட்டு கம்பம் வேலப்பர் கோயிலில் முருகன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். முன்னதாக பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், சுருளி அருவி சுருளி வேலப்பர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பல ஊர்களில் அன்னதானமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !