திருக்காமீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ஆன்மிக நடைபயணம்
வில்லியனுார்: பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு, ஆன்மிக நடைபயணம் நேற்று நடந்தது.வில்லியனுாரில் பழமையான திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்தி பெற்ற ஆறு சிவாலயங்களும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ளன.நேற்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து பல்வேறு கோவில்களுக்கு நடைபயணம் துவங்கியது.மாலை 6:30 மணியளவில் துவங்கி, மாட வீதிகள் வழியாக ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரர் கோவில், மூலக்கடை விநாயகர் கோவில், ராமபர தேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சீத்தர் பீடம், காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட் டைமேடு வழியாக வில்லி யனுார் வந்தடைந்தனர்.