உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் போக்கும் பரிதிநியமம்

பாவம் போக்கும் பரிதிநியமம்

தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். இத்தலத்தின் புராணப்பெயர் பரிதிநியமம். பரிதி என்றால் ‘சூரியன்’.  சூரியன் சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதால், சுவாமிக்கு பரிதியப்பர் என பெயர் வந்தது. இது பருத்தியப்பர் என மருவி விட்டது. இங்குள்ள மங்கலநாயகியை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். இத்தல முருகனுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கும். கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தமும், பின் புறத்தில் சந்திரதீர்த்தமும் உள்ளன. பரிதியப்பர், மங்கலநாயகி, முருகன், சூரியன் ஆகியோரை வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் நீங்கும். சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இங்கு பங்குனி உத்திரவிழா சிறப்பாக நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !