உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திர தபசு காட்சி

பங்குனி உத்திர தபசு காட்சி

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சேத்துார் அருள்மிகு அழகிய நாயகி அம்பாள் உடனுறை திருக்களர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தபசு காட்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. 12:00 மணிக்கு தபசு மண்டபத்தில் சுவாமி புறப்பாடு மாலை 7:00 மணிக்கு தபசு காட்சி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மாலை 7:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், சனிக்கிழமை மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !