உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் பிப்., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத்; திம்மராஜம்பேட்டை, ராமலிங்கேஸ்வரர் கோவி லில், 13 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்., 8ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோவில் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வாலாஜாபாத் ஒன்றி யம், திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட் டுப்பாட்டின் கீழ், பர்வத னுறை ராமலிங்கேஸ்வரர் வர்த்தினி அம்பாள் உட கோவில் உள்ளது.


கடந்த, 17ம் நுாற்றாண் டில் கட்டப்பட்ட இக் கோவிலில், மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கொடி மரம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்ட பம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னிதியின் வலது புறத்தில் உத்சவர் உள்ளார். இடது புறத் தில் அய்யப்பன் மற்றும் திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் அருள்பா விக்கிறார். இந்த கோவிலில், மாசி மகம், கந்தசஷ்டி, நவராத் திரி உள்ளிட்ட உள்ளிட்ட விழாக்கள் விசேஷமாக நடைபெறு கின்றன. இக்கோவிலில் ராஜ கோபுரம் மற்றும் மண் டபம் உள்ளிட்டவை சிதிலம் அடைந்ததைய

டுத்து, சீர் செய்து கும்பா பிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அப்ப குதி மக்கள் சார்பில் தீர் மானிக்கப்பட்டது. அதன்படி, கோவில் கட்டடங்கள் பழுது பார்த் தல், கோவில் மூல ஸ்தா னங்களில் உள்ள கோபு ரங்களுக்கு வண்ணம் நீட்டுதல் உள்ளிட்ட பணி கள்நிறைவு பெற்றுள்ளன. 


இதுகுறித்து. அக்கோவில் திருப்பணிக் குழுவினர் கூறியதாவது: இக்கோவிலில் கடந்த 2012ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து மீண்டும் நடத்த திட் டமிட்டு புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற் றுள்ளன. கோவில் விமானம், சுவாமி சிலைகளுக்கு வர்ணம் அய்யப்பன் தீட்டப்பட்டு மற்றும் முருகபெருமானுக்கான சன்னிதிகளும் சீரமைக்கப் பட்டுள்ளன. கோவில் வனாகத்தின் தரை பகுதியில் சுருங்கல் அமைக்கும் பணி மேற் கொள்ளப்படுகிறது. பணிகள் முடிவுற்று வரும் பிப்ரவரி 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !