கள்ளிப்பட்டு முருகன் கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED :12 hours ago
காஞ்சிபுரம்: கள்ளிப்பட்டு முருகன் கோவி ல் புதுப்பிக்கும் பணியில், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் துவக்கியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, கள்ளிப்பட்டு கிராமத்தில், முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. இந்த கோவிலை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறையினர், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த நிதியை பயன்படுத்தி, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் கோவில் புதுப்பிக்கும் பணியை துவக்கியுள்ளனர். இந்த கோவில் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்று, வரும் ஜனவரியில் கும்பாபிஷேக விழா நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.