திருப்பூரில் மங்கள வேல் வழிபாடு மக்கள் குவிந்தனர்
ADDED :12 hours ago
திருப்பூர்: திருப்பூரில் மங்கள வேல் வழிபாடு நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஹிந்து அன்னையர் முன்னணி, திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், 32 வது வார்டு கோல்டன் நகர், ஜெயலட்சுமி நகர் நால் ரோட்டில் மங்களவேல் வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் கைகளால், மங்கள வேலுக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.