கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.10.31 லட்சம்
ADDED :9 hours ago
பெருமாநல்லூர்: பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
அறநிலையத்துறை துணை ஆணையர்தர்ஷினி, முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர்மனோகரன், அறங்காவலர்கள் சுந்தர முத்து, திருமூர்த்தி, செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். உண்டியலில், 10 லட்சத்து, 31 ஆயிரத்து, 995 ரூபாய்; 60 கிராம் தங்கம்; 37 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம், கே.எம்.சி. பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.