அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
ADDED :1 days ago
மேலூர்; அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டது. இன்று (பிப். 28) முதல் மார்ச் 4 வரை சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 5 காலையில் மஞ்சுவிரட்டும், மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச் 6 கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள்வார். மார்ச் 7 தேரோட்டமும், மார்ச் 8 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.