உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்

திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதியாகராஜர் உன்மத்த நடனம் நடந்தது.

காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமப் பிரும்மோற்சவத் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் மாசிம ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா, சூரிய பிறையில் வீதியுலா, சந்திரபிறையில் வீதியுலா, பூதவாகனத்தில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சி நேற்று வசந்த மண்டபத்திலிருந்து தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் நிகழ்ச்சி நடந்தது.வரும் 2ம் தேதி தேர்திருவிழா மற்றும் மாசிமகதீர்த்த வரி, தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. நாகதியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !