உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணபிரான் கோவிலில் வரும் 30ல் கருட சேவை

கண்ணபிரான் கோவிலில் வரும் 30ல் கருட சேவை

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் கண்ண பிரான் கோவிலில், வரும் 30ல், கருட சேவை உத்சவம் நடைபெற உள்ளது.

வாலாஜாபாத் வலம் புரி விநாயகர் கோவில் தெருவில், கண்ணபிரான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருட சேவை உத்சவம் நடைபெறும்.

நடப்பாண்டின் கருட சேவை உத்சவம், வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது.

மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !