உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு மகா லட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டு விழா

கிணத்துக்கடவு மகா லட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டு விழா

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் மகாலட்சுமி அம்மன் கோவிலில், 19ம் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த, 22ம் தேதி, திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 26ம் தேதி, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  27ம் தேதி, யாகசாலை வேள்வி பூஜை, விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அம்மன் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்டவைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !