உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் திருத்தேர் விழா மார்ச் 04ல் நடைபெறுகிறது.

கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் திருத்தேர் விழா மார்ச் 04ல் நடைபெறுகிறது.

கோவை; கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருத்தேர் விழா மார்ச் மாதம் 04.03.2026 நடைபெறுகிறது.இதன் முதல் நிகழ்வாக 17-02-2026 அன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கிராம சாந்தி,கொடியேற்ற நிகழ்ச்சி, அக்னி சாட்டு நிகழ்வு ஆகியன நடந்தது. உற்சவர் அம்மன் புலி வாகனத்தில் திருவீதியுலா வந்தார்,தொடர்ந்து கிளி வாகனம்,சிம்ம வாகனம்,திருவிளக்கு வழிபாடு,அன்ன வாகனம்,காமதேனு வாகனம்,வெள்ளை யானை வாகனம் ஆகியவற்றில் உற்சவர் அம்மன் திருவீதியுலா. 03.03.2026 அன்று திருக்கல்யாண வைபவம்  நடைபெறுகிறது. 04.03.2026 இன்று மதியம் 2 மணி அளவில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்ததாக குதிரை வாகனம் இந்திர விமானம் தெப்பத் திருவிழா தீர்த்தவாரி வசந்த விழா ஆகியநிகழ்வுடன் நிகழ்ச்சி நிறைவடையும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் உள்ள அக்னி கம்பம் முன்பு பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்கவும்,தங்கள் கணவர்களின் உடல்நலம் நன்றாக இருக்கவும் அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து  அம்மன் படத்திற்கு முன்பு உப்பு, மிளகு வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !