பகவதி அம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா
ADDED :1475 days ago
அலங்காநல்லுரர்: வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பகவதி அம்மன் கோயில் 30ம் ஆண்டு பங்குனி உற்சவ விழா மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம், கரும்புத் தொட்டில், துலாபாரம்,பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, சக்தி கரகம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டி, கிராம மக்கள் செய்தனர்.