உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர் திருவிழா நிறைவு பெற்றது.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். மண்டகப்படி: நேற்று முன்தினம் இரவு குருவப்ப பிள்ளையார் கோயிலில், வடுகபட்டி பிள்ளைமார்கள் சங்கத்தினர் மண்டகப்படி செய்தனர். நிறைவு: பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !