உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கு திருப்பதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கொங்கு திருப்பதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தொண்டாமுத்தூர்: பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, உற்சவர் திருமஞ்சனம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. இறை அனுமதி பெற்று, பெண் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களில், புதுமண தம்பதிகளை மாலை மாற்ற வைத்தனர். அதனைத்தொடர்ந்து, 11:20 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனம் பஜனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !