உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியம்: பக்தர்கள் தரிசனம்

காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியம்: பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் நேற்று காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் உள்ள அம்மையார் தனி சன்னதில் அருள்பலித்து வருகிறார்.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர் அம்மையார் இவர் கடந்த கி.பி.5ம் நூற்றாண்டில் பிறந்தவர். நேற்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு அம்மையாருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.பின் வெள்ளிக்கவசம் அணிந்து அம்மையார் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின் மதியம் பக்தர்களுக்கு அண்ணதானம் வழக்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காரைக்கால் அம்மையார் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக கைலாசநாதர் கோவிலில் நடராஜர் சன்னதியில் அம்மையார் எழுந்தருளினார்.அப்போது விளக்குகள் அனைக்கப்பட்டு அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் நாஜிம்எம்.எல்.ஏ.,அறங்காவலர் குழுவினர் தலைவர் கேசவன்,செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அம்மையாரை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !