ஊட்டி மாரியம்மன் திருவிழா கோலாகலமாக துவங்கியது
ADDED :1397 days ago
ஊட்டி: ஊட்டியில் மாரியம்மன் திருவிழா கோலாகலமாக துவங்கியது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 18ம் தேதி பூச்சொரிதல் நவகலச பூஜையுடன் துவங்கியது. நேற்று, முதல் ஒவ்வொரு சமூகத்தினர் நடத்தும் சிறப்பு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி எப்., 22ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா ஏப்., 19ம் தேதி நடக்கிறது.