உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி பூஜை

தேவகோட்டை கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி பூஜை

தேவகோட்டை: ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ஆதிசங்கரர் கோயிலில் நவகிரகங்கள் சந்நிதியில் தம்பதி சமேதகர்களாக உள்ள ராகு பகவான், கேது பகவான் இருவருக்கும் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு அபிஷேகங்களும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசவிநாயகர் கோயில், சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், மும்முடி நாதர் கோயில் , சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் உட்பட நவக்கிரகங்களில் உள்ள ராகு பகவான் கேது பகவான் இருவருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் தங்கள் ராசிக்கு பரிகார பூஜைகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !