உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் சிவன் கோவில் ராகு கேது பெயர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் சிவன் கோவில் ராகு கேது பெயர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மதியம் 1:15 மணிக்கு கோயிலில் கும்பம் வைத்து, ஜெபம் செய்து, ஹோமங்கள் வளர்த்து, பெயர்ச்சி நேரத்தில் நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகளை ரகு பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தார் பெயருக்கு அர்ச்சனை செய்து ராகு, கேது மற்றும் நவக்கிரகங்களை வழிபட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவஹர், கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !