உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிவில ராகு கேது பெயர்ச்சி விழா

காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிவில ராகு கேது பெயர்ச்சி விழா

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் நேற்று ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று பிற்பகல் 3 11 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார்கள்.

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் ராகு, கேதி பகவான்கள் தனித்தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர்.தென் காளகஸ்தி என்றழைக்கப்படும் இக்கோயில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து பங்கேற்கின்றனர்.நேற்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ராகு பகவான் கேது பகவான் தரிசனம் தந்தனர்.அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடர்ந்து ராகு பகவானுக்கும் சிம்ஹை தேவிக்கும், கேது பகவானுக்கும் சித்திரலேகா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.பரிகார ராசிக்காரர்கள் ஏராளமானோர் பங்கேற்று, பரிகாரங்களை செய்தும், ராகு பகவான் மற்றும் கேது பகவான்களை தரிசனம் செய்தனர். முன்னதாக பிற்பகல் 1.15 மணியிலிருந்து பூர்வாங்க பூஜை, நட்சத்திர பரிகார ஹோமம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணம் மற்றும் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை உபயதாரர் கம்பம் கே.ஆர்.ஜெயப்பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர், ராகு, கேது பெயர்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ் செய்திருந்தார். பூஜைகளை சிவாச்சாரியார் மணிவாசகம் தலைமையில் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !