உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூர் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

சேவூர் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள சேவூர் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது. சேவூர் அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோவிலில், பங்குனி மாத திருவிழா, கடந்த, 13ம் தேதி, கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.

இரவில், பூஜை முடிந்ததும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வந்தனர். சேவூரில் உள்ள ராஜவீதி, கோபி மெயின் ரோடு, வடக்கு வீதி, ஐஸ்கடை வீதி, தெற்கு வீதி, சேவூர் ரோடு, ராக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான மக்கள், மாவிளக்கு எடுத்து வந்து, சக்தி மாரியம்மனை வழிபட்டனர். பெண்கள், பூவோடு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், பக்தர்கள் குண்டம் இறங்கினர். மாலை, கம்பம் களைதல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இன்று பகல், 12:00 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !