ராபர்ட்சன்பேட்டையில் ஹம்ச வாகன உற்சவம்
ADDED :1331 days ago
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி பிரம்மோற்சவத்தில் ஹம்ச வாகன உற்சவம் நேற்று நடந்தது.ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையிலுள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி பிரம்மோற்சவம், இம்மாதம் 12ல் ஆரம்பமானது. ஒன்பதாம் நாளன்று, மலையாளி சங்கம் சார்பில் ஹம்சவாகன உற்சவம் நடத்தப்பட்டது.இதையொட்டி, கோவிலில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா மங்களாரத்தி நடந்தது. கேரள இசைக்கலைஞர்களின் ரெட்டை தாயம்பகா, சண்டி மேளம், சிங்காரி மேளம், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவில் கணபதி, அருள்சக்தி மாரியம்மன், சுவாமி ஐயப்பன், ஆகிய தேர்களுடன் ஸ்ரீ பிரசன்ன நாராயண சுவாமி தேர் பவனி நடந்தது.விழா ஏற்பாடுகளை தலைவர் சுரேஷ் நாராயணா, பொதுச் செயலர் அனந்த கிருஷ்ணன், தலைமையிலான உற்சவ குழுவினர் செய்திருந்தனர்.