விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1620 days ago
பெ.நா.பாளையம்: சங்கடகர சதுர்த்தியொட்டி, சின்ன தடாகம்புதூர் சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நாம சங்கீர்த்தனம், தீபாராதனை ஆகியன நடந்தன. நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு மலர் அலங்காரத்தில் சக்தி சித்த செல்வவிநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நிறைவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.